சில பத்திரிக்கையாளர்களும் , பிளாக் பதிவர்களும் , இன்னும் சில புத்திசாலிகளும் நினைப்பது போல் ஜெ.கே.ரித்திஷ் காமெடியான,கேவலமான ஆள் இல்லை என்றுதோன்றுகிறது. ஒருவனின் கஷ்டத்தை கண்முன்னால் பார்த்தாலே உதவ தயங்கும் கபோதிகள்மத்தியில் (நான் இப்படி வார்த்தை பிரயோகித்ததில்லை ஆனாலும் முடியவில்லை) எங்கோ பேப்பரில் படித்த ஒரு இயக்குனரின்மனம் பிறழ்ந்ததால் அவர் மனைவி படும் கஷ்டத்தை புரிந்து யாருக்கும் சொல்லாமல் சென்று ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து உதவி அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினை தீர உதவியவன் உங்களுக்கு கிண்டல் பொருளா? மேலும் அவன் முகம் உங்கள் எண்ணப்படி அழகில்லாமல்,குள்ளமாய் இருப்பதாக நீங்கள் நினைப்பதால் கிண்டலாக தெரிகிறதா? உங்கள் மனம்,அழுக்காய்,ஊனமாய் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை? அவன் கொடுக்கும் எண்ணமுள்ளவனாய் இருப்பதால் புகழ்ந்து பிழைப்பவர்கள் அவனை சுற்றி இருக்கிறார்கள் அது அவன் பிழையா? இங்கே ரசிகனின் பணத்தை வசனம் பேசி நடித்து கொள்ளையடித்தவர்கள் வெளி மாநிலங்களிலும்,நிலங்களிலும் தம் சந்ததிக்கு சேர்த்து வைக்கிறார்கள். இவன் ஒருவனாவது கொடுக்கிறானே! அதற்காக புகழவேண்...
Comments
Sorry not write more, but my English is not good.
A hug from Portugal