காதல் படத்தில் நடிக்க வைக்க பாலாஜி சக்திவேல்,கேட்டபோது கதை சரியில்லை என்று அப்பா மறுத்து விட்டார்.

சுப்ரமணியபுரம் கதை சொல்லி நடிக்க சொன்னபோது மகன் இதெல்லாம் கதையா என்று அவமானப்படுத்தி,இயக்குனர் சசிகுமாரை அலையவைத்து நடிக்க மறுத்து விட்டார்.ரண்டு படங்களும் தமிழ்சினிமாவின் முத்திரையாக நிலை பெற்று விட்டது.


இவங்க ரெண்டு பெரும் இல்லங்க


அந்த அப்பா,மகன் பாக்கியராஜ்,சாந்தனு.
இப்படி படங்களை விட்டு விட்டு ஆசை,ஆசையாய் பண்ணிய
சக்கரைக்கட்டி,பனிக்கட்டியாய் போய்விட்டது.

வருத்தத்தில் இருக்கும் பாக்கியராஜ்,மகனைவைத்து மோசர்பியர் கம்பெனிக்கு இயக்கும் படத்தின் கதையைமாற்ற ஆலோசித்து வருகிறார்.


கதை:பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் கதாநாயகன்,நாயகி இருவருக்குள்ளும் ,பழக்கம் ,நெருக்கமாகி,இறுக்கமாகிறது.தங்கள் ஆசைக்கு பெற்றோர்கள் தடை போடுவார்கள் என்று பயப்படும் இளசுகள்
பரிட்சை எழுதி விட்டு யாருக்கும் சொல்லாமல் சென்னைக்கு வந்து விடுகின்றனர்.சென்னையில் இருவரும் படும் கஷ்டம் அவர்களுக்குள் இருப்பது காதல் இல்லை இனக்கவர்ச்சி என்பதை புரியவைக்கிறது .தங்கள் தவறை உணர்ந்து இருவரும் பிரிகின்றனர்.இதுதான் புதிய வார்ப்புகள் கதை.(எப்படி இருக்கு????)

Comments

Popular posts from this blog