சசி இந்த வியாபார சினிமா உலகில் வித்தியாசமான மனிதர்!


வரிசையாக சொல்லாமலே,ரோஜாகூட்டம்,டிஷ்யூம் என்று மூன்று வெற்றிகள் கொடுத்த பின்னும்,தரமான படங்கள் மட்டுமே செய்வேன் என்று பிடிவாதமாக இருந்து இன்னுமொரு நல்ல படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்!


பூ மிக அருமையான சினிமா நமது கலாச்சாரத்தை சொல்லும் உண்மையான சினிமா.


வெட்டு,குத்து,வெடிகள்,ரத்தம் என்று பார்த்து அலுத்த ரசிகர்களுக்கு பூ கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் தெரியலாம்.அதுதான் அந்த படத்தின் பலம்.தனது கண்டு பிடிப்பான ஸ்ரீ காந்தை மறுபடி மெருகேற்றி யுள்ளார்.பார்வதி அப்படியே நம் ஊர் பெண்.இன்னும் நிறைய சொல்லணும்,நீங்கள் முதலில் படத்தை பாருங்கள் .மறுபடி இன்னொருமுறை பூவை ப்பற்றி எழுதுகிறேன்!

(தெனாவட்டு படத்துக்கு கொடுக்கப்படும் அடாவடியான விளம்பரம் இந்த "பூ" க்கு கொடுத்தால் ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு போயி சேரும்)

Comments

Popular posts from this blog