Posts

Showing posts from August 3, 2008

அமீர் - சீமான் ரஜினி

Image
அமீர் - சீமான் ரஜினி கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர். வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர். கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் ரஜினியின் நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டதால், தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார் ரஜினி. அதில், ஒட்டு மொத்த கன்னடர்களையும் தான் தாக்கிப் பேசவில்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குவோரையும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விள
Image
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் உறவினர் நடத்தி வரும் கிளப்பில் போலீசார் திடீர் ரெய்ட் நடத்தி அங்கு சூதாட்டம் ஆடிய 21 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடபழனி 100 அடி சாலையில், `தி லீக் கிளப்' என்ற பெயரில் க்ளப் நடத்தி வருகிறார் ராமச்சந்திரன். இவர் விஜயகாந்த் மனைவியின் அக்கா ராதாவின் கணவர். 3 மாடிக் கட்டிடம் கொண்ட இந்த கிளப்பில் மது பார், பில்லியர்ட்ஸ், இறகுப் பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், உடற் பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், ஆயுர்வேத மசாஜ் நிலையம் போன்ற வசதிகள் உள்ளன. லீக் கிளப்பில் 1,200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக அங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பெரிய பணக்காரர்கள் இங்கு உறுப்பினர்களாக உள்ளனர். மாலை நேரத்தில் கிளப் சுறுசுறுப்பாகி விடும். இந்த கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று கிளப்புக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 21 பேர் ரூ. 3 லட்சத்தை குவித்து