Posts

Showing posts from April 26, 2009
நேற்று வெளியான " பசங்க " மிக , மிக வித்தியாசமான முயற்ச்சி . இயக்குனர் சசிக்குமார் மிக நுணுக்கமான ரசனையுள்ள இயக்குனர் என்பதை இந்த படத்தை தயாரித்ததன் மூலம் மறுபடியும் நிரூபித்து இருக்கிறார் . " பசங்க " சரியான " வால் பசங்க" இந்த படத்தின் இயக்குனர் " பாண்டிராஜ் " இயக்குனர் சேரன் அவர்களின் உதவி இயக்குனர் . முதலில் இந்த கதையை அவர் இயக்குனர் சங்கர் அவர்களிடம் தான் சொன்னாராம் , அவர் நம்பிக்கை இல்லாமல் நிராகரித்து விட்டாராம் . ஆனால் இன்று படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது . ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான் கதாநாயகன் , கதாநாயகி , வில்லன் , காமெடியன் என்று மொத்த படமும் இவர்களை சுற்றியே ! மிக ஆச்சர்ய மாக படத்தை பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலான நேரம் சிரித்து கொண்டே இருக்கிறார்கள் . இந்த படத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் நடித்து இருக்கிறார் . அவருக்கு வயது இரண்டரைதான் ஆனால் அவர் வரும் காட்சியெல்லாம் தியேட்டர் அதிர்கிறது . இந்த கோடைகாலத்துக்கு குஞ்சு , குளுவான்களை குடும்பத்தோட
Image
இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் இரண்டு பிரச்சினை. ஒன்று பாராளுமன்ற தேர்தல். மற்றொன்று இலங்கை தமிழர் பிரச்சினை. (இன்று அது முடிவுக்கு வந்து விட்டதாக சிலர் சந்தோசப்படுகிறார்கள்) இலங்கை தமிழர் பிரச்சினையில் மொத்த தமிழக கட்சிகளும் சேர்ந்து இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி புறக்கணித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இந்திய அரசு உண்மையில் பயந்திருக்கும் .விஷயம் மிக எளிதாக சர்வதேச கவனத்தை பெற்று இருக்கும். இதை செய்யாத கட்சிகளும்,எடுத்து கூறாத தமிழ் ஆர்வ அமைப்புகளும் கருணாநிதியை மட்டும் குறை கூறுவதில் எனக்கு உடன் பாடில்லை. இவர்கள் இப்படி செய்வதால் மக்கள் அந்த ஓட்டை அதிமுக வுக்கு போடுவார்களே தவிர மற்ற தனி வேட்பாளர்களுக்கு போடப்போவதில்லை. விடுதலைப்புலிகள் தலைவரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கூறிய ஜெயலலிதா லாபம் அடையட்டும்,ஆனால் கருணாநிதி தோற்று போகட்டும் என்று அலையும் இவர்களை விட கருணாநிதி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. இந்த காட்டு கூச்சல் இப்போது போடுபவர்கள் ஜெயலலிதா ஆட்சி வந்தால் வாயையும்,இன்னொன்றையும் பொத்தி கொள்ளத்தான் முடியும். மீறி பேச அவர்களாலும் முடியாது ! ஜெயலல