சோரம் போன போராளிகள் ! இது தமிழர்களுக்கு கேடு காலம் போலிருக்குது . ஈழத்தமிழர் களின் அவலங்களை பேசி எத்தனை யோ பேர் " ஒட்டு பொருக்கி " இருந்தாலும் , இப்போது ஜெயலலிதாவும் , அவருக்காக ஒட்டு பொறுக்கும் , சீமான் . பாரதி ராஜா அன்ட் கம்பெனியின் ஒட்டு பொறுக்கும் ஸ்டைல் தான் கேவலமாயிருக்கிறது . முன் பொரு முறை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதாவிடம் இலங்கைத்தமிழர்களை " கிபேர் " குண்டுகளை போட்டு கொத்து , கொத்தாக கொல்கிறார்கள் . இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்ட போது , போர் என்றால் சாகத்தான் செய்வார் கள் என்று சண்டாலத்தனமாக ஜெயலலிதா சொல்லி அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வந்ததை ஈழத்தமிழர்களுக்காக உருகும் ஈன தமிழர்கள் எளிதாக மறந்து விட் டார்கள் . ஜெயலலிதா ஜெயித்தவுடன் இலங்கைக்கு படையை அனுப்பி " ராஜ பக்சேவை " கைது செய்து கொண்டுவந்து தமிழ் நாட்டில் வைத்து தூக்கில் ஏற்றிவிடுவார் . அதன் பின் இலங்கையில் தமிழர்களுக் கு சம உரிமை வாங்கித்தந்து விடுவார் என்று இவர்கள் நம்புகிறார்க...