Posts

Showing posts from November 11, 2012
துப்பாக்கி இயக்குனர் முருகதாசுக்கு ஒரு கடிதம் அன்புள்ள இயக்குனர் அவர்களுக்கு வணக்கம் நான் எஆர்கே.ராஜராஜா இளவட்டம் பட இயக்குனர்.தவிர்த்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதி தமிழ் படுத்தி உள்ளேன். துப்பாக்கி படம் பார்த்தேன்.அருமை . அதில் எனக்கு ஒரு கருத்து பற்றி உங்களிடம்  ஒரு கேள்வி  தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும் நிச்சயமாக அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.அதை படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஸ்லீப்பர் செல் ஆக ஒருவன் மாறும் அளவுக்கு அவனுக்கு ஏற்ப்பட்ட நிர்ப்பந்தம் என்ன எதனால் அவர்கள் அப்படி ஆனார்கள் என்ற விஷயத்தை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை? பதவிக்காகவாகவா? பணத்துக்காகவா ? அல்லது அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்காகவா? இதை நீங்கள் சொல்லவில்லை!!!!! இஸ்லாமியர்களின் வாழ்வுப்பகுதி வழியாக கரசேவா  தொண்டர்களின் ரயில் போகும் பொது தீவிபத்து நடந்ததால் இஸ்லாமியர்கள் தான் தீவைத்துவிட்டார்கள் என்று சொல்லி நடந்த வெறியாட்டத்தில் பல ஆயிரம் பேர் எரித்து கொல்லப்பட்டார்களே.அதை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள்?? அந்த கலவரத்தில் ஈட