சமீப காலங்களில் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு கதை அறிவு வற்றி போய் விட்டது போல் . பல தெலுங்கு படங்களின் காட்சிகளையும்,கதையையும் திருடி படமெடுக்கிறார்கள் .அந்த வகையில் "படிக்காதவனுக்கு "பின் சுந்தர் சி நடித்து வெளிவந்துள்ள பெருமாள் படமும் சேருகிறது. கணேஷ், லக்ஷ்மி,ரணம், போன்ற தெலுங்கு படங்களின் சீன்களையும் கதையையும் இணைத்து படம் எடுத்துள்ளனர்! வின்சென்ட் செல்வா போன்ற இயக்குனர்கள் ஏன்தான் இப்படி படம் எடுக்கிறார்களோ!? இந்த வாய்ப்பு,சசி,சுசிந்திரன் போன்ற நல்ல திறமையுள்ள இயக்குனர்களுக்கு கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும்.
