சிலம்பாட்டம் படத்தில் இடைவேளை சண்டைக்காட்சியில் அமைந்துள்ளது . அய்யர் பையனாக இருக்கும் சிம்பு வும் , அவர் தந்தையும் , பிண்டம் வைத்துகொண்டிருக்க , தெலுகு நடிகர் காட்டுராஜ் சிம்புவின் தந்தையை தாக்குகிறார் , இதைப்பார்த்து கொதிக்கும் பிரபு காட்டுராஜாவின் ஆட்களுடன் மோதுகிறார் , இடையில் அவர் மாட்டிக்கொள்ள சிம்புவின் அப்பாவை கொல்ல , காட்டுராஜா கத்தி எடுக்க ஆவேசமான சிம்பு அவர்கையை ப்பற்றி தூக்கி அடிக்கிறார் அனைவரும் திகைக்க அனைவரையும் அடித்து , துவைக்கிறார் . பிரபுவும் , மற்றவர்களும் திகைக்க மீசைவைத்த புலி போல் தெரிய , அய்யர் சிம்புவும் ஒரே திரையில் வர இடைவேளை . சிம்பு இந்த சண்டைகாட்சி எடுத்த பொது முழு ஒத்துழைப்பு தரவில்லையாம் . காட்சி அருமையாக வந்திருப்பதால் மறுபடியும் நடித்து கொடுக்கிறேன் என்று சிம்பு சொல்ல , யூனிட் பொள்ளாச்சி போயிருக்கிறது . பாக்கு மரங்களுக்கிடையில் சண்டை காட்சியாம் . தீபாவளிக்கு சிம்பு சிலம்பு ஆடுவதே சந்தேகம்தானாம் . ( முக்கியமான விஷயம் இந்த மாற்றமெல்லாம் கார் விபத்துக்கு அப்புறம் தானாம் )