சமீபத்தில் எனது மின் அஞ்சல் முகவரிக்கு வந்த மடல்! பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!! கடவுளிருந்தால் சாத்தான் ஏன்? ************ ********* ********* ********* **** ஒரு நல்ல தகப்பன் தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதைச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல், தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாக நடக்கட்டும், இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா ? அது போல ஒரு நல்ல கடவுள் சாத்தான்களை ( தீமைகளை) உண்டாக்கிவிட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளைப் புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பி பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் விழட்டும் என்று சொல்லுவானா?? ( 23.10.1943 - குடி அரசு இதழ்) அன்புடன், அன்பு, அமீரகத்திலிருந்து... .
