Posts

Showing posts from September 21, 2008
Image
Webmasters click here " சன் " பிக்சர்ஸ் வெளியிட்ட " காதலில் விழுந்தேன் " நேற்று இரவுக்காட்சி பார்த்தேன் . படம் பரவாயில்லை . ஆனால் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய நாக்கு முக்க பாடல் திரையில் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை . மற்றபடி லாபமான படம்தான் !
Image
சில பத்திரிக்கையாளர்களும் , பிளாக் பதிவர்களும் , இன்னும் சில புத்திசாலிகளும் நினைப்பது போல் ஜெ.கே.ரித்திஷ் காமெடியான,கேவலமான ஆள் இல்லை என்றுதோன்றுகிறது. ஒருவனின் கஷ்டத்தை கண்முன்னால் பார்த்தாலே உதவ தயங்கும் கபோதிகள்மத்தியில் (நான் இப்படி வார்த்தை பிரயோகித்ததில்லை ஆனாலும் முடியவில்லை) எங்கோ பேப்பரில் படித்த ஒரு இயக்குனரின்மனம் பிறழ்ந்ததால் அவர் மனைவி படும் கஷ்டத்தை புரிந்து யாருக்கும் சொல்லாமல் சென்று ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து உதவி அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினை தீர உதவியவன் உங்களுக்கு கிண்டல் பொருளா? மேலும் அவன் முகம் உங்கள் எண்ணப்படி அழகில்லாமல்,குள்ளமாய் இருப்பதாக நீங்கள் நினைப்பதால் கிண்டலாக தெரிகிறதா? உங்கள் மனம்,அழுக்காய்,ஊனமாய் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை? அவன் கொடுக்கும் எண்ணமுள்ளவனாய் இருப்பதால் புகழ்ந்து பிழைப்பவர்கள் அவனை சுற்றி இருக்கிறார்கள் அது அவன் பிழையா? இங்கே ரசிகனின் பணத்தை வசனம் பேசி நடித்து கொள்ளையடித்தவர்கள் வெளி மாநிலங்களிலும்,நிலங்களிலும் தம் சந்ததிக்கு சேர்த்து வைக்கிறார்கள். இவன் ஒருவனாவது கொடுக்கிறானே! அதற்காக புகழவேண்
Image
சன் டிவி "மாறன் சகோதரர்கள் எதை தொட்டாலும் பணம் கொட்டோ , கொட்டென்று கொட்டுகிறது . சன் பிக்சர்ஸ் ஆரம்பித்து இன்று முதல் படம் " காதலில் விழுந்தேன் " வெளியாகி உள்ளது . தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாதமாதிரியான மெஹா ஒப்பனிங் தமிழ்நாடு முழுவதும் " ஹவுஸ் புல் ' மதியம் இரண்டு மணி நிலவரம் இது வசூல் விவரம் நாளை சொல்கிறேன் ! ( ஒரு ஆச்சர்யமான தகவல் இந்த படத்தின் இயக்குனர் பிரசாத் ஆர்க்காடு வீராசாமியின் உறவினராம் )
Image
அன்பு நண்பர்களே ! நீங்களும் ஹீரோவாக ஒரு வாய்ப்பு ! ( எனது நண்பர் அ டுத்து இயக்கப்போகும் தமிழ் படத்தில் ) கராத்தே , கிக்பாக்ஸிங் , அல்லது சண்டைக்கலைகளில் ஆர்வம் இருந்தால் கீழே தரப்பட்டுள்ள ஈ மெயில் லுக்கு உங்கள் புகைப்படங்களை யும் , மற்ற விவரங்களையும் அனுப்பி வைக்கவும் தகுதியிருந்தால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் . இந்தியா மட்டுமல்ல , உலகின் எந்த நாட்டுக்காரரானாலும் அனுப்பலாம் முக்கிய தகுதி தமிழ் பேசவாவது தெரிந்திருக்க வேண்டும் உடனே அனுப்புங்கள் ! நன்றி தமிழ்ராஜா இது நண்பரின் ஈமெயில் முகவரி ; kng_rr@yahoo.com
Image
சென்னை லயோலா கல்லூரி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் வரிசையில் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் முதல் இரு இடங்களில் உள்ளனர். தற்போதைய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஜஸ்ட் முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய். லயோலா கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவருக்கு 21.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே தங்களைக் கவர்ந்த படம் நாடோடி மன்னன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். அவருக்கு 18.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவாஜி படங்களிலேயே சூப்பர் படம் என அவர்கள் பாராட்டியுள்ளது பாசமலர். நடிகர் விஜய் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 16.4 சதவீதம் ஆகும். அவரது படங்களிலேயே கில்லிதான் மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முறையாக முந்தியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. nanri;தட்ஸ் தமிழ் .காம் இந்த மாதிரியான கருத்து கணிப்பை நாம் ரஜினி , விஜய் என்று நம

ரஜினியால் அவ்வப்போது அவமானத்துக்கு ஆளாகும் தமிழ் ரசிகவிசிலடிச்சான்குஞ்சுகளுக்கு அவமானம் நேருவதை விட வேறு ஏதாவது பயன்உண்டா?

Image
ரஜினியால் அவ்வப்போது அவமானத்துக்கு ஆளாகும் தமிழ் ரசிகவிசிலடிச்சான்குஞ்சுகளுக்கு அவமானம் நேருவதை விட வேறு ஏதாவது பயன்உண்டா? அல்லது எந்த வகையில் பயன் இது இப்படியிருக்க வளர்ந்து லட்சக்கணக்கான வாசகர்களை கொண்டிருக்கும் குமுதம் , ஆனந்தவிகடன் , தினத்தந்தி , தினகரன் , தினமலர் போன்ற பத்திரிகைகள் மக்களே ரஜினியை வெறுக்கும் அளவுக்கு போனபின்னும் மறுபடியும் தூக்கி நிறுத்த முயல்வது ஏன் ? வாக்கெடுப்பு எடுத்த விகடன் ரஜினி செல்வாக்கு சரிந்துள்ளது என்று நிரூபித்து விட்டு பின் அடுத்தவாரம் ரஜினிக்கு ஆதரவாக குமுதம் எழுதியதால் உடனே தன் நிலை மாற்றி கொண்டு தந்திரன் என்ற படக்கதை போட்டு மறுபடியும் ரஜினிக்கு முக்கியத்துவம் தருகிறது ! இதைவிட கொடுமை நேற்று இரவு அனைவருக்கும் ( வலைப்பதிவர்களுக்கு ) கிடைத்த எந்திரன் புகை படத்தை இன்று மதியம் தமிழ்முரசு , மாலை முரசு , மாலைசுடர் போன்ற பத்திரிகைகள் போஸ்டர் போட்டு பெரிது படுத்தின இதற்க்கு காரணம் என்ன ? நாளை காலையில் தினத்தந்தி , தினகரன் , தினமலர் போன்ற எல்லாபத்திரிக்கைகளும் இதே மாதிரி போட்
Image
நேற்றுதான் பத்திரிகைகள் செய்வது சரியா என்று விவாதம் தொடங்கினோம்அதற்குள் இன்று மாலைப்பத்திரிக்கைகள் அனைத்தும் ரஜினி யின் "எந்திரன்" ஸ்பெசல் என்று போஸ்டர் போட்டு கூவி விற்கின்றன கொடுமை வேறென்ன சொல்ல ( மேலும் ரஜினியின் புகழ் வீழ்ச்சியில் இருப்பதை சரிக்கட்டுவதற்காக சங்கர் தரப்பினரே இந்த போட்டோக்களை வெளியிட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது )
Image
எஸ் . ஜெ . சூர்யா தமிழில் விஜய்க்காக ரெடி செய்த " புலி" படத்தின் ஸ்கிரிப்டை அப்படியே தெலுங்கில் " பவன் கல்யானை" அதே பெயரில் வைத்து டைரக்ட் செய்கிறார் . படம் அட்டகாசமாக தயாராகிறதாம் . எஸ் . ஜெ . சூர்யா முதல் பாதிவரை கதை சொல்லிவிட்டு பின்பாதியை சுருக்கமாக சொன்னாராம் விஜயிடம் , விஜய் முழுக்கதையும் சொன்னால்தான் ஒத்து கொள்வேன் என்று சொன்னாராம் . சரியென்று தயார் செய்து சொன்ன பொது பிடிக்க வில்லை என்று அனுப்பி விட்டாராம் அதன் பின் நல்ல கதையென்று ஒத்து கொண்டு விஜய் நடித்த " அழகிய தமிழ் மகன் " ஓடவில்லை . இதில் சந்தோசமான் சூர்யா எப்படியும் மெஹா ஹிட் கொடுத்து விஜய் முகத்தில் கரி பூச வேண்டும் என்று முனைப்போடு தீவிரமாக உழைக்கிறாராம் .( தூள் கிளப்புங்க சூர்யா ) அ ரசியல் வாதி யானவுடன் தன் மகளின் காதல் கல்யாணத்தை அங்கீகரித்து விட்டாராம் " பிரஜா ராஜ்யம் " கட்சித்தலைவர் சிரஞ்சீவி ( ஓட்டுக்காக அரசியல்வாதிகள் எதுவும் செய்வார்கள் )
Image
பி . வாசு வின் மகன் சந்தியா நடிக்கும் " மகேஷ் , சரண்யா மற்றும் பலர்" படத்தின் இயக்குனர் ரவி லிங்குசாமியின் உதவியாளர் மிக சில சினிமா அறிவாளிகளில் இவரும் ஒருவர் . இந்த படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் விதமாக உருவாக்கி உள்ளாராம் ( மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரவி ) பி . வாசு குசேலனில் ரஜினியை காலி பண்ணியது போல் தெலுங்கில் பால கிருஷ்ணாவையும் , நாகார்ஜுனாவையும் காலி பண்ணியுள்ளார். " மஹாரதி " என்று ஒரு படம் எடுத்தார் பால கிருஷ்ணா காலி " கிருஷ்ணர்ஜுன் " என்று ஒரு படம் எடுத்தார் நாகார்ஜுனவை விட மோகன் பாபு வின் மூத்த மகன் விஷ்ணு காலி . மூன்றாவதாக இப்போது ரஜினி காலி இதில் மஹாரதி படத்தை உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு போட்டு காட்டினால் எந்த கஷ்டமும் இல்லாமல் அவர்கள் காலி ஆவது உறுதி ! ( டிரை பண்ணுங்கள் சென்னை யில் சிடி கிடைக்கும் )
Image
" கில்லிடா" பட ரிலிஸ் க்கு பின் இலியானா ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளாராம் ரஜினி , விஜய் , அஜித் , சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் கேட்ட பொது நடக்காத து இப்போது நடந்துள்ளது . பழம்பெரும் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது !
Image
திரு ஜேக்கப் அவர்களின் தலைமையில் லண்டன் உலக தமிழ் அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவின் புகைப்படங்கள்
Image
திருமதி சித்ரா ராமகிருஷ்ணன் தமிழிசை பாடகி சமீபத்தில் சென்னைவந்த பொது சந்தித்தோம் வற்றாத இசை ஆர்வத்தில் குடும்பத்தலைவியான பின்னும் லண்டன் சபைகளில் பாடல்கள் பாடி தமிழை வளர்த்து கொண்டிருக்கிறார் . அவருக்கு அற்புதமான குரல்வளம் இயற்கையாகவே இருக்கிறது நாகார்ஜுனா நடித்த ராகவா லாரன்ஸ் இயக்கிய " மாஸ் " படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார் விரைவில் ஏ . ஆர் . கே . ராஜராஜா இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தில் பாட உள்ளார் . லண்டனில் தமிழ் பாடல்கள் பாடிகொண்டிருக்கும் இசைக்குயில் உலக அளவில் புகழ் பெற நாமும் , வாழ்த்துவோம் வாழ்த்துக்கள் சித்ரா ராமகிருஷ்ணன் அவர்களே நல்ல மனைவி அமைவது மட்டுமல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் திரு ராமகிருஸ்ணன் அவர்கள் பிசியான புகழ் பெற்ற ஆடிட்டராக பணி புரிந்தாலும் மனைவியின் இசைப்பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊக்குவிக்கிறார் என்பதே அவர் சிறந்த மனிதர் என்பதற்கு எடுத்து காட்டு .