Posts

Showing posts from December 21, 2008
Image
சமீப காலங்களில் தெலுங்கு பட உலகம் நல்லதரமான படங்களை கொடுத்து வருகிறது ! பெரிய நடிகர்கள்,இயக்குனர்கள் படங்களை ஓரம் தள்ளி தெலுங்கு ரசிகர்கள் சின்ன படங்களை ,புதுமுகங்கள் நடித்த படங்களை வெற்றியடைய வைத்துள்ளனர்! அஷ்டா, சம்மா (கண்களிரன்டால் நாயகி சுவாதியை தவிர அனைவரும் புதுசு இதில் நடித்த பார்வதி சமீபத்தில் இறந்து போனார்) "பிளேடு பாப்ஜி" (குறும்பு நரேஷ் ஹீரோ) ' கொத்த பங்காரு லோகம் " (அனைவரும் புதுசு) விநாயக்குடு (முன்னூறு கிலோ எடையுள்ள குண்டு பையன் ஹீரோ,கதாநாயகி,பொம்மலாட்டம் ருக்மணி) "குபேறுலு " (சிவாஜி,அலி ) இந்த படங்கள் எதிலும் வெட்டு,குத்து வன்முறைகளோ,குண்டு வெடிப்புகளோ,என் ஊர் பெரிசு,உன் ஊர் சிறிசு என்பது மாதிரியான கேணத்தனங்கள் இல்லை முக்கியமாக ஜாதியை தூக்கி பிடித்து தொடை தட்டும் ஈனத்தனங்கள் இல்லை ! தமிழ்சினிமா எப்போ மாறுமோ!
Image
தமிழ் சினிமாவில் பத்து தேவர் இயக்குனர்களும்,ஒரு ராவுத்தர் (ராஜ்கபூர்)இயக்குனரும் இணைந்து நடித்துவரும் படம் மாயாண்டி குடும்பத்தார். படத்தின் கதைப்பின்னணி தேவர் ஜாதியை சார்ந்து இருப்பதால் இப்படி எல்லா தேவர்களும் ஒன்றாக சேர்ந்து படமெடுக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தலை தூக்கும் ஜாதியம் எங்கு கொண்டு போய் விடுமோ!!!
Image
கடைசி நேரத்தில் கஜினி (தமிழ்)தயாரிப்பாளர் சந்திரசேகருக்கு ஐந்து கோடி பணம் கிடைத்தது! அவர் நீதி மன்ற படியேறியதால் தாமதமாக நீதி ஆனால் உடனே கிடைத்தது . மூணு கோடி உடனே கொடுத்து விட்டு மீதி இரண்டு கோடியை மூன்று வார காலக்கெடுவுக்குள் தருவதாக நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்தான் நேற்று ஹிந்தி கஜினி சென்னையில் வெளியானது!
Image
கருணாஸ் ,கார்த்திகா நடிப்பில் வெளி வந்துள்ள "திண்டுக்கல் சாரதி " காவிய படமுமில்லை, கமர்சியல் படமுமில்லை ஆனால் இந்த சாதாரண படத்தை சன்டிவிக்காரர்கள் ஏதோ பெரிய இதிகாசம் அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள். கொடுமை என்னவென்றால் சண் நியூசில் அந்த படத்தை பற்றி செய்தி சொல்கிறார்கள் . குனியும் தமிழன் முதுகில் நன்றாக குதிரை ஏறுகிறார்கள் சன்டிவி நிர்வாகத்தினர் . இதனால் தமிழ் திரையுலகை தங்கள் சர்வாதிகாரத்துக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள். இவர்களுக்கு பயந்து தான் விஜயின் வில்லு ஜனவரி ஒன்பதாம் தேதியே வருகிறது!
Image
என்ன காரணமோ தெரிய வில்லை விஜயின் வில்லு பொங்கலுக்கு முன் ஜனவரி ஒன்பதாம் தேதியே திரைக்கு வருகிறது. அதே சமயம் சன்பிக்சர்சின் தீ பதினான்காம் தேதி வருகிறது சன்பிக்சர்சுக்கு பயந்து ஐந்து நாட்களுக்கு முன்பே வில்லு வருகிறது ! விளம்பரத்தால் வில்லை உடைந்த பல்லாக்கி விடுவார்கள் சன்டிவிக்காரர்கள் !