புரட்ச்சிதளபதியின் அப்பா ஜி.கே.ரெட்டி அவர்களை பார்த்து கதை சொல்லப்போனாராம்நவ்தீப் ஷீலாவை வைத்து படம் இயக்கிய இயக்குனர்.
வரவேற்று இரண்டு மணிநேரத்துக்குமேல் மனம் விட்டு பேசிய ரெட்டி அவர்கள்,விஷாலை ஹீரோவாக்க தான் பட்ட கஷ்டங்களை வேதனையோடு கூறினாராம்.
முதன் முதலில் தமிழ்நாட்டின் பழம் பெரும் நிறுவனமான
உலக உருண்டை கம்பெனியில்,நான் பைனான்ஸ் பண்ணுகிறேன் என் பையனை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என்றாராம்.அவர்கள் நாங்கள் புதுமுகங்களை வைத்து நாங்கள் படமேடுப்பதில்லை என்று மறுத்து விட்டார்களாம்.
பின் சூப்பர் கம்பெனியின் வடநாட்டு தயாரிப்பாளரை அணுகினாராம்.அவர் நீங்க பணம் கொடுப்பிங்க படம் ஓடலன்னா என் கம்பெனிக்கு கெட்ட பெயர் வரும் என மறுத்து விட்டாராம்.
பிறகு இப்போது போண்டியாகி உள்ள ரத்தினமான தயாரிப்பாளரிடம் போனாராம்(இருவரும் தெலுங்குக்காரர்கள் வேறு)அவர் மகனைவைத்து ஒல்லிப்பிச்சானின் அண்ணன் இயக்கி படம் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த நேரம்.ரெட்டி யை பார்த்து ரத்தினம் இவன் மூஞ்சியை எல்லாம் தமிழ் நாட்டில் பாக்க மாட்டாங்கய்யா என்று விமர்சித்து அனுப்பி விட்டாராம்.
அதன் பின்தான் ஜெயப்பிரகாசை சந்தித்து செல்லமே பண்ணினாராம். இதில் கொடுமை என்ன வென்றால் இயக்குனர் விஷால் பகுதிகளை குறைத்து,பரத் பகுதிகளை அதிகமாக வைத்து இருந்தாராம்.படம் பார்த்து ஆவேசமான ரெட்டி
பணம் போடுவது என் பையனுக்காக அந்த பரத்துக்காக இல்லை என்று பரத் சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்து விட்டாராம்.இதன் பாதிப்பில்தான் பரத் தன்னை சின்ன தளபதி என்று அழைக்க சொல்கிறார்.
சரி விசயத்துக்கு வருவோம்.
இப்படி தன் பையனை வைத்து படம் தயாரிக்க தயங்கியவர்களே இப்போது கால்ஷீட் கேட்டு வெக்க மில்லாமல் போன் போடுகிறார்களாம்.
யாருக்கும் கொடுக்காமல் ரெட்டி இப்போது தனது மாநில ஆட்களுக்கு மட்டும் கால்சீட் கொடுக்கிறாராம்.

234x60_c

Comments

Popular posts from this blog