இந்த பதிவில் ஒரு சிறு திருத்தம் போன இரண்டுவாரங்களாக பசங்க படம் பிக்கப் ஆகி நல்ல வசூல் செய்கிறது!




சமீப காலமாய் தமிழ்சினிமா ரசிகர்களின் மனநிலையை கணிக்க முடியாமல் திணறுகிறது தமிழ் திரையுலகம்.


அருந்ததி,அயன் படங்களுக்குப்பின் -


நியுட்டனின் மூன்றாம் விதி,பசங்க,சர்வம்,மரியாதை,ராஜாதிராஜா,சுப்ரமண்யம்,


இவன்தாண்டாபோலிஸ்,போன்ற டப்பிங் படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.


இதில் அயன்,அருந்ததி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரி குவித்தது.


மரியாதை தனது மரியாதை காப்பாற்றி கொள்ளும் அளவுக்கு வசூல் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் மற்ற படங்கள்?


நியூட்டனின் மூன்றாம் விதி ,பசங்க இரண்டு படமும் நல்ல பாராட்டை பெற்றன ஆனால் வசூல் டப்பிங் படங்களைவிட மோசம்.


பில்லாவுக்கு பின் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஏக எதிர்பார்ப்போடு ஆர்யா,திரிஷா நடித்து வெளிவந்த சர்வம் படம் வசூலில் சர்வ நாசம் என்றார் ஒரு விநியோகஸ்தர்.


இது போக சுயவிளம்பர பிரியரான நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்து வெளிவந்த ராஜாதிராஜா படமும் பப்படம் ஆகிவிட்டது.இந்த படத்தை மும்தாஜ்க்காக எடுத்துள்ளனர்,மும்தாஜ் இதில் விஜய டி ராஜேந்தரை விட அதிகமாக கத்துகிறாராம்.


இப்படி வரிசையாக படங்கள் ஊத்தி கொள்ள தமிழ் சினிமா உலகம் கவலையில் இருக்கிறது.


இதனால் தான் தோரணை படத்துக்கு இம்மாத வெளியீடு என்று பதினைந்து நாட்களாக விளம்பரம் தருகிறார்கள்.(இருபத்தியிரண்டு அல்லது இருபத்தி ஒன்பது வெளியாகலாம்.)


சேரனின் பொக்கிஷம் இம்மாதம் இருபத்தி ஒன்பது வெளியிட நினைத்து இருந்தவர்கள் இப்போது அடுத்தமாதம் ஐந்தாம் தேதி வருகிறார்களாம்.


இப்படி குழப்பத்தின் எல்லையில் இருக்கின்றனர் சினிமாக்காரர்கள்.

Comments

Ayan vasoola?Enna thambi soleenga?
tamilraja said…
anna "ayan" rajiniyin "sivaji" samamaaga vasool seythu niraiya cinemakkaararkalai mantaiyai piykka vaiththuvittathu!

Popular posts from this blog