துப்பாக்கி இயக்குனர் முருகதாசுக்கு ஒரு கடிதம்



அன்புள்ள இயக்குனர் அவர்களுக்கு வணக்கம் நான் எஆர்கே.ராஜராஜா

இளவட்டம் பட இயக்குனர்.தவிர்த்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட மொழிமாற்று படங்களுக்கு
வசனம் எழுதி தமிழ் படுத்தி உள்ளேன்.
துப்பாக்கி படம் பார்த்தேன்.அருமை . அதில் எனக்கு ஒரு கருத்து பற்றி உங்களிடம்  ஒரு கேள்வி  தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும் நிச்சயமாக அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.அதை படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் ஸ்லீப்பர் செல் ஆக ஒருவன் மாறும் அளவுக்கு அவனுக்கு ஏற்ப்பட்ட நிர்ப்பந்தம் என்ன எதனால் அவர்கள் அப்படி ஆனார்கள் என்ற விஷயத்தை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை?

பதவிக்காகவாகவா?

பணத்துக்காகவா ?

அல்லது அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்காகவா?

இதை நீங்கள் சொல்லவில்லை!!!!!

இஸ்லாமியர்களின் வாழ்வுப்பகுதி வழியாக கரசேவா  தொண்டர்களின் ரயில் போகும் பொது தீவிபத்து நடந்ததால் இஸ்லாமியர்கள் தான் தீவைத்துவிட்டார்கள் என்று சொல்லி நடந்த வெறியாட்டத்தில்
பல ஆயிரம் பேர் எரித்து கொல்லப்பட்டார்களே.அதை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள்??

அந்த கலவரத்தில் ஈடுபட்ட ஒருவன் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை கையால் கசக்கி காலால் நசுக்கினேன் என்று கொடூரத்தை பெருமையாக தெகல்கா பத்திரிகையில் பேட்டியாக கொடுத்து சந்தொசப்பட்டானே இது உங்களுக்கும் சந்தோச உணர்வைத்தான் தந்ததா?



அப்துல்கலாம் அவர்களை விஞ்ஞான துறையில் அனுமதித்தது தவறு,அவரை ஜனாதிபதி ஆக்கினதும் தவறு என்பது தான் உங்கள் கருத்தா?








ஒருபடைப்பாளிக்கு இருக்கவேண்டிய தராசுதன்மையை நீங்கள் உணரவில்லையா?



இதற்க்கு முன்பும் திரு மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் இதே விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள்.







அவர்கள் கையில் தராசு இருந்தது. உங்கள் கையில்?????????!!!!!!!!!!!!







கதாநாயகன் பேசுவதாக படத்தில் வரும் கருத்துக்களில் ஒன்று

ஸ்லீப்பர் செல்களை அழிக்க முடியாது. அவர்கள் கட்டளை கிடைக்காவிட்டால் அமைதியாக காலம் முழுவதும் இருந்து விடுவார்கள்

இதற்க்கு வேறு வழியில்லை.என்று கூறி உள்ளீர்கள்.







உண்மையில் அவர்கள் மனம் கல்லாகி இந்தமாதிரியான செயல்களை செய்ய தூண்டும் அளவுக்கான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுப்பது தானே
உண்மையான தீர்வாக இருக்க முடியும்.!!!







ஏற்க்கனவே மதக்கலவர ஆபத்து இருக்கும் சமுதாயத்தில் ஒருபக்கமாக
நின்று வெறுப்பை மேலும் அதிகமாக்கும் வகையில் வசனங்களை எழுதியது ஏன்????
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.


நன்றி
ராஜராஜா


Comments

Popular posts from this blog