ஆமிர் கான் ஜோடியாக ஆசின் நடிக்கும் கஜினி இந்திப் படம் இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை.

காரணம் இன்னும் இரு பாடல்கள் படமாக்க வேண்டியிருக்கிறதாம். இந்நிலையில் இந்தியில் புதிதாக அவர் நடிக்கவிருந்த ப்ரியதர்ஷன் மற்றும் சல்மான்கான் ஆகியோரது படங்களிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு அவருக்குப் படங்களே இல்லை என்பதுதான் உண்மை. அவர் நடித்த தசாவதாரம் இந்த ஆண்டு வெளியானாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த படம் அது.

எனவே மீண்டும் குறைந்தபட்சம் இரு தமிழ்ப் படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் ஆசின், அதற்கான முயற்சிகளில் தீவிரமாகியிருக்கிறாராம்.

பரத்பாலா இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 19 ஸ்டெப்ஸ் தமிழ்-மலையாளம் படத்தில் நடிக்கும் அவர், அடுத்து விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சு நடந்து வருவதாகத் தெரிகிறது.

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு படத்துக்குப் பின், ஏவிஎம் பாலசுப்பிரமணியம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக முரட்டுக்காளை என்ற பெயரையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இதில் நயனதாரா ஜோடியாக நடிப்பார் என முதலில் கூறப்பட்டு. ஆனால் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடி நயனதாராதான். எனவே ஏவிஎம் படத்துக்கு நாயகியாக ஆசினை ஒப்பந்தம் செய்யப் பேச்சு நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆசின் கூறுகையில்,

தமிழில் மீண்டும் இரு படங்களில் நடிக்கவிருப்பது உண்மைதான். கமல் சார் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விஜய் படத்தில் நடிக்கக் கேட்டிருப்பது உண்மைதான். இதுகுறித்து அவர்களே முறையான அறவிப்பு வெளியிடுவார்கள் என்றார்.

Comments

Popular posts from this blog