நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் பல வருடங்களாக பணியாற்றிய ரசிகர் மன்ற தலைவர் குணசீலன் என்பவரை அப்பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். ரசிகர்களுக்கும், தனக்கும் இத்தனை வருடங்களாக பாலமாக இருந்த ஒருவரை நீக்கியதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றையாவது கமல் வெளிப்படையாக அறிவித்திருக்கலாமே?

கமல் நற்பணி மன்றத்தின் மூலம் இதுவரை எண்ணற்ற நலத்திட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. இதில் குணசேகரனின் பங்கு என்ன என்பதை உணர்ந்திருக்கும் ரசிகர்கள், அத்துமீறல்களுக்கும் இடம் இருக்கும் என்று யோசிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நடந்தது என்ன என்பதை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கமல் அறிவிக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் முன்னணி பத்திரிகை ஒன்றில் குணசீலன் குறித்து புகார்கள் எழுதப்பட்ட போதுகூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கமல், இப்போது எடுத்ததன் பின்னணி என்னவாக இருக்கும்? இந்த கேள்விகளுக்கு இனிமேலாவது விடை சொல்வாரா கமல்?

Comments

Popular posts from this blog