சென்ஸார் போர்டுக்கு திடீர் உத்தரவு ஒன்று வந்திருக்கிறது. பெண்களின் உரிமையை மறுக்கும் இந்த உத்தரவை எதிர்த்து மகளிர் அமைப்புகள் இன்னும் மவுனம் சாதிப்பது அதிசயம்!

அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சரானதும், சினிமாவில் சிகரெட்டுக்கு கொள்ளி வைக்க நினைத்தார். சினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடைவிதிக்க முயன்றார்.

நடைமுறையில் சிகரெட் சட்டப்பூர்வமாக விற்கவும், பிடிக்கவும் படுகிற தேசத்தில் இப்படியொரு சட்டமா? பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அன்புமணியின் சிகரெட் தடை கானலானது.

ஆனாலும் அவர் அசரவில்லை. சினிமாவில் சிகரெட்டுக்கு ஒட்டுமொத்த தடை என்பதை, பெண்களுக்கு மட்டும் என சுருக்கியிருக்கிறார். அதாவது, சினிமாவில் பெண்கள் சிகரெட் பிடிக்கும் காட்சியை தடை செய்யவேண்டும், அனுமதிக்கக் கூடாது என சென்ஸார் போர்டுக்கு சுகாதாரத் துறையிடமிருந்துகட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆண் பெண் என பிரித்து ஒழுக்கம், தியாகம், கற்பு போன்ற சுமைகளை பெண்கள் மீது மட்டும் திணிப்பது ஆணாதிக்க மனோபாவம். பெண்கள் சினிமாவில் சிகரெட் பிடிக்க தடை என்பதும் இதையே காட்டுகிறது.

பெண்களுக்கு எதிரான இந்த கட்டுப்பாடை எதிர்த்து போராடுவார்களா பெண்கள்?

Comments

Popular posts from this blog