
டைரக்டர்கள் எல்லாம் நடிக்க வந்திட்டாங்க. இனிமே நடிகர்களும் டைரக்ஷன் Kalabhavanmaniகத்துக்க வேண்டியதுதான் என்று சிம்பு புலம்பி நான்கு நாட்கள் ஆகவில்லை. அதற்குள், நடிகர் ஒருவருக்கு ஆப்பு வைத்துவிட்டு, தானே அந்த கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஒருவர்.
மலையாள நடிகர் கலாபவன் மணிக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் தனிப் பெயரே உண்டு. தான் தங்கியிருக்கும் ஓட்டலின் பில்லை மட்டும்தான் கட்ட சொல்வாரே தவிர, அவர் தண்ணியடிப்பதற்கெல்லாம் தானே பில் கொடுத்துவிடுவார். அதுமட்டுமல்ல, சாதாரண மினரல் வாட்டர் பில்லை கூட தயாரிப்பாளர் தலையில் கட்டுவதில்லை இவர். அப்படிப்பட்ட கலாபவன் மணியை பஞ்சாமிர்தம் படத்தில் நடிக்க அழைத்திருந்தார் அப்படத்தின் இயக்குனர்.
நடிக்க வந்த இரண்டே நாட்களில் அவருக்கு தேவையில்லாத குடைச்சல்களை கொடுத்து, இந்த படமே வேண்டாம் என்று ஓடிப் போகிற அளவுக்கு வைத்துவிட்டாராம். அட, இதென்ன புது கலாட்டா என்று விசாரித்தால், ஆரம்பத்திலிருந்தே இந்த கேரக்டர் மேல் ஒரு கண்ணோடு இருந்தாராம் இயக்குனர். மணி போனதும், "நானே அந்த வேடத்தில் நடிக்கிறேன்" என்று கூறிவிட்டு தயாரிப்பாளரின் சம்மதத்தையும் வலுக்கட்டாயமாக வாங்கிவிட்டாராம். உரலுக்குள் தலையை விட்டபின் இழுக்கிற வழியை பார்ப்பதுதானே அழகு. அதனால்தான் தயாரிப்பு தரப்பும் இந்த குறுக்கு வேலையை பொறுத்துக் கொண்டதாம்.

Comments