
நயன நடிகையின் அடி மனசு ஆசையை சமீபத்தில் அவர் வாயாலேயே கேட்டிருக்கிறார் ஒருவர். அது மாலை மயங்கிய நேரம் என்பதால், அளவுக்கு மீறி உண்மையை கக்கியிருக்கிறார் நடிகையும்!
அப்படி என்னதான் பேசினாராம்? நானும் அவனும் நிஜமா காதலிச்சோம். அவனை நம்பி எல்லாத்தையும் கொடுத்தேன். ஆனால் என்னை ஏமாத்திட்டான். இனிமே என் வாழ்க்கையிலே காதலே இல்லை. சம்பாதிக்கணும். நிறைய சம்பாதிக்கணும். கோடி கோடியாக சம்பாதிச்சு வெளிநாட்டிலே செட்டில் ஆகணும். அதுக்காக எப்படி வேணும்னாலும் இருப்பேன். எப்படி வேணும்னாலும் நடிப்பேன். (இடையிடையே 'ஹக் ஹக்' என்று விக்கல்களை சேர்த்துக் கொள்ளவும்)
அதிர்ச்சிக்குள்ளான அந்த வி.ஐ.பி 'அவன் அவன்னு சொல்றியே, அது யாரும்மா?' என்றாராம் பக்குவமாக. 'ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உனக்கு தெரியலையே' என்று நயன நடிகை கண்களை சுழற்ற, அதுவரை உளறியதை அங்கேயே எரேஸ் பண்ணிவிட்டு நடையை கட்டினாராம் வி.ஐ.பி. இப்போது புரிகிறதா, நடிகையின் அளவுக்கு மீறிய கவர்ச்சிக்கு காரணம் என்ன என்று?

Comments