'வில்லுக்கு விஜயன்னு சொல்வாங்கள்ல... இனிமே விஜய்னு மாத்திக்கலாம்!'' - பன்ச் டயலாக்குடன்தான் வரவேற்கிறார் பிரபுதேவா. காத்திருக்கவைக்காமல் வந்து வரவேற்கிற அபூர்வங்களில் ஒருவர். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி அமர்கிற அதே துறுதுறு தேவா!
''வில்லுன்னா, வேகம். அதுவும் இது விஜய் எடுக்குற வில்லு. இன்னிக்கு விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ். அதான், படத்தில் அவர் பேரே 'புகழ்'னு வெச்சோம்!'' எனப் புன்னகைக்கிறார்.

Comments

Popular posts from this blog