நாயகன்


எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் கடமை தவறாத காவல் அதிகாரியின் கதைதான் இதுவும்.

சிட்டியில் பள்ளிக் கூடம் செல்லும் இளம் மாணவிகள் பலர் திடிர் திடீரென காணாமல் போகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை அறீய திக்குமுக்காடிப் போகிறது காவல் துனற. இதற்கிடையே டாக்டரான சங்கீதாவும் கடத்தப்படுகிறார். சங்கீதாவிடம் அவர் கணவரான ஸ்ரீமன் இருக்கும் இடத்தை கேட்டு துன்புறுத்துகிறது வில்லன் கோஸ்டி.

தனித் தனி டிராக்குகளாக செல்லும் இவ்விரண்டு சம்பவங்களின் காரணகர்த்தாக்கலை கண்டுபிடிக்கும் வேலையில் போலீஸ் அதிகாரி ரித்தீஷ், டாக்சி டிரைவர் ரமணா ஈடுபட்டு வெற்றி காண்பதே மீதி கதை.

கடத்தலுக்கான காரணமெல்லாம் பல சினிமாக்களில் பார்த்து சலித்ததுதான் என்றாலும் திரைக்கதையின் வேகமும் ஆங்காங்கே ஏற்படும் டிவிஸ்ட்களூம் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறது.

அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அதிரடியாக களமிறங்கும் ரித்தீஷ், படம் முடியும் வரை அதனை மெயிண்ட்டெயின் செய்து மிரட்டுகிறார். குற்றவாளியை கயிற்றில் தொங்கவிட்டு அவன் மீதேறி ஊஞ்சலாடியபடி விசாரிக்கும் இடத்தில் புருவம் உயர வைக்கிறார்.

லாக்கப்பில் அடைக்கப்படும் ரவுடி பொன்னம்பலம், " உன் மேல நான் ஒரு கண்ணு வச்சுட்டேன்" என மிரட்டுகிறார். பதிலுக்கு பொன்னம்பலத்தின் மேல் துப்பாக்கி வைக்கும் ரித்திஷ், " நீ என் மேல கண்ணத்தான் வைப்ப, நான் கன்னயே (துப்பாக்கி) வைப்பேன்" என பஞ்ச் டயலாக் பேசி அசரடிப்பது ஆச்சர்யம்.

டாக்சி டிரைவராக வரும், ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கிறார். இவரது முறைப் பெண்ணாக வந்து ஒரு டூயட்டுக்கு ஆடும் கீர்த்திசாவ்லா, திடீரென காணாமல் போவது காமடி.

Comments

Popular posts from this blog