
ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம்.
தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார்.

Comments