
ஒரே நேரத்தில் சூர்யா, கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார் நயனதாரா.
அந்தக் காலத்தில் சிவாஜி, பிரபுவுடன் அம்பிகா, ராதா ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். பின்னர் அம்பிகா, ராதா சேர்ந்து ரஜினி, கமலுடன் ஜோடி போட்டு நடித்தனர்.
சமீபத்தில் சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்த ஷ்ரியா, அவரது மருமகன் தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார்.
அதேபோல நயனதாரா, ரஜினியுடனும், தனுஷுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
மாமனார், மருமனுடன் இணைந்து நடித்த நயனதாரா அடுத்து சகோதரர்களுடன் ஜோடி போடுகிறார். பருத்தி வீரன் கார்த்தியுடன் லிங்குச்சாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நயனதாரா. அதேபோல, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேருகிறாராம்.
இதற்கிடையே, தனது கிளாமருக்கு ரசிகர்களிடமும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இனி படத்துக்குப் படம் கிளாமர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப் போகிறாராம்.

Comments