சில பத்திரிக்கையாளர்களும்,
பிளாக் பதிவர்களும்
,
இன்னும் சில புத்திசாலிகளும்

நினைப்பது போல்

ஜெ.கே.ரித்திஷ்

காமெடியான,கேவலமான ஆள் இல்லை என்றுதோன்றுகிறது.

ஒருவனின் கஷ்டத்தை கண்முன்னால் பார்த்தாலே உதவ தயங்கும்
கபோதிகள்மத்தியில்
(நான் இப்படி வார்த்தை பிரயோகித்ததில்லை ஆனாலும் முடியவில்லை)

எங்கோ பேப்பரில் படித்த ஒரு இயக்குனரின்மனம் பிறழ்ந்ததால் அவர் மனைவி படும் கஷ்டத்தை புரிந்து யாருக்கும் சொல்லாமல் சென்று ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து உதவி அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினை தீர உதவியவன் உங்களுக்கு கிண்டல் பொருளா?

மேலும் அவன் முகம் உங்கள் எண்ணப்படி அழகில்லாமல்,குள்ளமாய் இருப்பதாக நீங்கள் நினைப்பதால் கிண்டலாக தெரிகிறதா?

உங்கள் மனம்,அழுக்காய்,ஊனமாய் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை?


அவன் கொடுக்கும் எண்ணமுள்ளவனாய் இருப்பதால் புகழ்ந்து பிழைப்பவர்கள் அவனை சுற்றி இருக்கிறார்கள் அது அவன் பிழையா?


இங்கே ரசிகனின் பணத்தை வசனம் பேசி நடித்து கொள்ளையடித்தவர்கள்
வெளி மாநிலங்களிலும்,நிலங்களிலும் தம் சந்ததிக்கு சேர்த்து வைக்கிறார்கள்.

இவன் ஒருவனாவது கொடுக்கிறானே!

அதற்காக புகழவேண்டாம்,இகழாமல் இருந்தால் போதும்
.
அவனிடம் கேட்கப்பட்ட கேவலமானஒருகேள்விக்கு அவன் சொன்ன
பொறுப்பான பதில் என்ன தெரியுமா?

ரித்திஷிடம் நிருபர்:உங்கள் மூக்கு சப்பையாக அசிங்கமாக இருக்கிறதே,நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் ஐடியா இருக்கிறதா?

ரித்திஷ் பதில்;இல்லபாஸ்நம்ம மூஞ்சி திராவிட மூஞ்சி நமக்கு இதுதான் அழகு!

(கேள்வி கேட்டவன் ரதிக்கும்,மன்மதனுக்குமா பிறந்திருப்பான்?)

Comments

mani said…
yen kintal panravanunga aaththa,appan mattum rathi,manmathanungalaannu ketka maattingalooooooooo?????
tamilnadunews said…
This comment has been removed by the author.
Unknown said…
முட்டாள்கள் தங்கள் முகங்களை கண்ணாடியில் பார்ப்பதில்லை
அப்படி கேள்வி கேட்டவன்
குமுதம் நிருபர்தான்னு நினைக்கிறேன்.அதில படிச்சதா ஞாபகம்.
சினிமா செய்திகளை சுட சுட தருகிறீர்கள் ...!
வாழ்த்துக்கள்...!
அவர் ரதிக்கும் மன்மதனுக்கும் பிறந்திருந்தால் கூட அந்தக் கேள்வியை கேட்டிருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து.
வர்த்தக செய்தி நிறுவனங்கள் எந்த அளவுக்கு தரமானவை என்பதற்கு ஒரு சோறு(கேள்வி) பதம்.
tamilraja said…
வருகை தந்து வாழ்த்திய உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
ஜெ,நான்,நவநீதன் ஆகியோருக்கு !