பழனி' பரத், மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் படம் ஆறுமுகம். பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ஆறுமுகம்.

பணக்கார பெண்ணுடன் மோதும் ஏழை இளைஞனின் கதை. பரத் ஏழை இளைஞனாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் பணக்கார பெண்ணாக வருகிறார். மாப்பிள்ளை, மன்னன், படையப்பா படங்களின் கலவையாக இதன் கதை தோன்றுகிறது.

பரத்துடன் முதல் முறையாக இணைகிறார் பிரியா மணி. தேசிய விருது பெற்ற பின்னர் அவர் நடிக்கவுள்ள முதல் படம் இது.

படத்துக்கு இசை தேவா. அண்ணாமலை படத்தை இணைந்து கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவும்,தேவாவும் அதன் பின்னர் இப்படத்தின் மூலம் மீண்டும் கை கோர்க்கின்றனர். எனவே ரஜினிக்கு அண்ணாமலை போல பரத்துக்கு ஆறுமுகம் அமையும் என எதிர்பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog