சென்னை லயோலா கல்லூரி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் வரிசையில் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் முதல் இரு இடங்களில் உள்ளனர். தற்போதைய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஜஸ்ட் முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய்.

லயோலா கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவருக்கு 21.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே தங்களைக் கவர்ந்த படம் நாடோடி மன்னன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். அவருக்கு 18.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவாஜி படங்களிலேயே சூப்பர் படம் என அவர்கள் பாராட்டியுள்ளது பாசமலர்.

நடிகர் விஜய் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 16.4 சதவீதம் ஆகும். அவரது படங்களிலேயே கில்லிதான் மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முறையாக முந்தியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

nanri;தட்ஸ் தமிழ் .காம்

இந்த மாதிரியான கருத்து கணிப்பை நாம் ரஜினி,விஜய் என்று நமது வலைப்பூவில் எடுத்தோம் அதிலும் அதிகம்பேர் விஜய்க்குதான் ஒட்டு போட்டார்கள் ஆனந்தவிகடனுக்கு,லயோலாவுக்கு முன்னே நாம்தான் இந்த கருத்து கணிப்பில் இறங்கினோம். நமது கணிப்பிக்கு கிடைத்த வெற்றி இது! கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

Comments

Popular posts from this blog