இதுவரை தமிழ் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்ற பிடிவாதத்துடன் இருந்து வரும் இலியானா தமிழிலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

தெலுங்கு ரசிகர்களின் தேவதையாக, வலம் வந்து கொண்டிருப்பவர் இலியானா. தெலுங்கில் இலியானாதான் நம்பர் ஒன் நாயகி. திரிஷாவைக் கூட இலியானா ஓரம் கட்டி விட்டார்.

முன்னணி நாயகர்கள் அனைவரும் இலியானாவைத்தான் ஜோடியாக போட ஆர்வம் காட்டுகிறார்கள். அவர் கிடைக்காதவர்கள்தான் திரிஷா பக்கம் திரும்பிப் பார்க்கின்றனர்.

தமிழில் கேடி படத்தில் இலியானா நடிக்க வந்த புதிதில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தேடி வந்த பல பட வாய்ப்புகளையும் அவர் கண்ணை மூடிக் கொண்டு உதறித் தள்ளினார்.

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களும் கூட இலியானாவைக் கேட்டு தோல்வி அடைந்தனர். விஜய் தனது 2 படங்களுக்காக இலியானாவை முயற்சித்தும் முடியாமல் திரிஷா, நயனதாரா என நாட வேண்டியதாயிற்று.

இந்த நிலையில், தமிழில் நடிப்பதில்லை என்ற தனது பிடிவாதத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் இலியானா. தெலுங்கில் பாய்ஸ் சித்தார்த்துடன் அவர் நடித்த ஆட்டா, இளவட்டம் ஏ,ஆர்,கே.ராஜராஜா வசனம் எழுத தமிழில் டப் ஆகி வருகிறது.

இந்தப் படத்துக்குப் பின்னர் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் இலியானா.

படத்தில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் நடித்துள்ளார் இலியானா என்று ராஜராஜாகூறினார்

Comments

Popular posts from this blog