தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று, சிலம்பக் கலை. இக்கலையை மையமாக வைத்து உயிர், மிருகம் படங்களை இயக்கிய சாமி உருவாக்கும் படம்தான் சரித்திரம்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண் சிலம்பக் கலையை கற்றுக் கொடுக்கும் ஆசானாக நடிக்கிறார். இதனால் அவர் சிலம்பக் கலையை, களரி செல்வராஜ் என்பவரிடம் முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக, மிருகம் படத்தில் நடித்த ஆதி நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த மீனாட்சி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

Comments

Popular posts from this blog