

வெட்டி வசனம் பேசி ரசிகனை தூண்டிவிட்டு
சூப்பர்
ஸ்டார் பட்டம் வாங்கி சொத்துகுவித்தவர்கள் மத்தியில் ஒரு "ரியல்ஸ்டார் " "ரித்திஷ் "இவன் முகம் கொஞ்சம் அழகு கம்மி ஆனால் உள்ளம் ரொம்ப அழகானது "ரித்திஷ் ".காலில் விழுந்தால் கூட புத்திவராது ரஜினி ,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இவர்கள் இதுவரை தங்கள் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை வைத்து ஒரு சினிமாக்காரனையும் வாழவைத்ததில்லை அவர்கள் கால்சீட் கொடுக்கும் ஆட்களை பார்த்தீர்கள் என்றால் அனைவரும் கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி வாங்க கூட வழியில்லாதவர்களாக இருப்பார்கள் அவ்வளவு ஏழைகளுக்குத்தான் ஏழை ரசிகன் கொடுத்த அந்தஸ்த்தை பயன் படுத்துவார்கள் அப்படிப்பட்டவர்கள் மத்தியில் ரித்திஷ் ஒரு அதிசயம் அவன் செய்த காரியத்தை படித்தபின் மனசு உள்ளவர் யாராயிருந்தாலும் நெகிழ்ந்து போவார்கள் சினிமாவில் சம்பாதித்ததை நலிந்த சினிமாக்காரனுக்கு கொடுக்க மனமில்லாத வெட்கம் கேட்டவர்கள் மத்தியில் ரித்திஷ் ரியல் சூப்பர்ஸ்டார் இராம நாராயணனிடம் இணை இயக்குநராக சுமார் 25 படங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒருவர், தஞ்சை வீதிகளில் மனநோயாளியாகத் திரிந்துகொண்டிருக்கிறார். ஆச்சரியம் என்வென்றால் இவரே ஒரு படத்தை இயக்கியிருக்கிறாராம். முன்னணி வார இதழில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்த ரித்தீஷ், மேற்படி இயக்குநரின் மருத்துவச் செலவுக்கு ஐம்பாதாயிரம் கொடுத்து உதவியிருக்கிறார். கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் வருமானத்தில் கணவருக்குச் சோறு போடும் அவரின் மனைவி, ரித்தீஷின் இந்த உதவியைப் பெற்றுக்கொண்டதுடன், 'யாருண்ணே தெரியலையே மவராசன்' என்று வாழ்த்தினாராம். திரையுலக ஜாம்பவான்கள் பலரும் இதை ஒரு செய்தியாகப் படித்துவிட்டு ஒதுங்கிவிட்ட நிலையில், தானே முன்வந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் இவர், நிஜமாகவே நாயகன்தான்!
இப்ப சொல்லுங்க"ரித்திஷ் "ரியல் சூப்பர்ஸ்டார் தானே !!!!???

Comments