தினமலரில் படித்தது

மாட்டிறைச்சிக்கு அதிக மவுசுஅமெரிக்கா சொல்லும் தகவல்
"பருப்பு வகைகளின் விலை அதிகமாக இருப்பதால், அவற்றை விட குறைந்த விலையில் மாட்டு இறைச்சியில் அதிகளவில் புரதம் கிடைப்பதால், இந்தியாவில் அதன் நுகர்வு அதிகரித்துள்ளதோடு, பிரபலமும் அடைந்துள்ளது' என்று அமெரிக்க விவசாயத்துறை தெரிவித்துள்ளது.இத்துறையின் அறிக்கையில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:மாட்டு இறைச்சியை விட இந்தியாவில் பருப்பு வகைகளின் விலை அதிகம். அதே நேரம் மாட்டு இறைச்சியில் அதிகளவில் புரதச் சத்து இருக்கிறது. இதை அறிந்திருப்பதால், இந்தியாவில் மாட்டு இறைச்சி நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு தற்போது, வேறு பட்டு உள்ளது. மத உணர்வுக்கும், மாட்டு இறைச்சி நுகர்வுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இருப்பினும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் அங்கம் வகிக்கும், இந்துக்கள் பெரும்பாலும் மாட்டு இறைச்சி நுகர்வது இல்லை. அதே போல, 13 சதவீதம் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி நுகர்வது இல்லை.ஆனால், இளைய தலைமுறையினர், மாமிச உணவுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுக்கும் மாறி வருவது அதிகரித்திருக்கிறது. தற்போது, இந்தியர்கள் மத்தியில் வருவாய் அதிகரித்து வருவதால், உள்நாட்டு இறைச்சி நுகர்வு கணிசமாக அதிகரித்து வருகிறது.
விலை காரணமாக மாட்டு இறைச்சியும், பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப்படுபவையும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.முந்தைய ஆண்டில் இருந்து இனி வரும் 2009ம் ஆண்டு, மாட்டு இறைச்சி நுகர்வு 5 சதவீதம் அதிகரித்து 19.4 லட்சம் டன்களாக இருக்கும். சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 1.6 கிலோ மாட்டு இறைச்சியும், 1.8 கிலோ கோழிக்கறியையும் உணவாக உட்கொள்கின்றனர். அனைத்து இறைச்சி வகைகளிலும், மாட்டு இறைச்சியின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அதன் நுகர்வு பெரிதும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
thank's: "தினமலர் "

Comments

Popular posts from this blog