முதல் முறையாக ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் அனோசி அன்சாரி தொழில் அதிபர். விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இவர் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி கஜகஸ்தானில் இருந்து ரஷியாவின் `கோயுஸ்' ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா புறப்படுகிறார். பெண் பயணி ஒருவர் செல்வதால் அந்த ராக்கெட்டில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராக்கெட்டில் பயணம் செய்வதற்காக அவர் இப்போது, ரஷியாவில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவருடன் கோயுஸ் ராக்கெட்டில் ரஷியா, அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்களும் செல்கிறார்கள்

Comments

Popular posts from this blog