

அமீர்,சீமான் இருவரையும் காட்டமாக தாக்கி அறிக்கை விட்டுள்ளார். தங்கபாலு. இலங்கை தமிழருக்கு ஆதரவாக யார் பேசினாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்களாம். அவரிடம் ஒரு கேள்வி !!!!! ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. இப்படி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.தங்கபாலு அவர்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கும் கேடுகெட்ட செயலை செய்யும் மத்திய அரசை இதுவரை ஒரு வார்த்தையாவது கேட்டு இருக்கிறீர்களா தங்கபாலுஅவர்களே!?
தமிழ்பெண்களை கற்ப்பழித்து அவர்களின் பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்து வெடிக்கசெய்து கொள்ளும் ஈவு இரக்கமற்ற சிங்கள வெறி நாய்களுக்கு ஆயுத பயிற்ச்சி,தொழில் நுட்ப பயிற்ச்சி வழங்கி ஆயுதமும் வழங்குகிறது மத்திய அரசு.
அப்பாவிகளை கொன்று குவிக்க துணை போகாதே என்று ஒரு தமிழன் சொல்வது எப்படி தப்பாகும் திரு தங்க பாலு அவர்களே?
ஒரு தமிழனாக சொல்லுங்கள்.
அன்னை இந்திராவை கொன்றவர்கள் நாட்டின் பிரதமாராக வரலாம் ,காந்தியை கொன்றவர்கள் இந்த நாட்டில் சுகமாக வாழ்ந்து கொண்டு இன்றும் வன்முறையை அரங்கேற்றலாம்.அதை நீஙகள் ஏற்று கொள்வீர்கள்.
ஆனால் தன் தமிழ் மக்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு துடிப்பதை கண்டு கதறும் தமிழனின் கதறலை உங்களால் ஏற்று கொள்ள முடியாது !!!! .
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய தலைவராக இல்லாமல்
ஒரு தமிழனாக உங்கள் மத்திய அரசிடம் சொல்லி இலங்கைராணுவத்துக்கு ஆயுதம் வழங்குவதை தடுத்திருக்கலாமே!
ஏன் உங்களால் அதை செய்ய முடியவில்லை???
அமெரிக்காவும்,இங்கிலாந்தும் மத அடிப்படையில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்காக குரல்கொடுக்க இரண்டு அமைச்சர்களை அனுப்பியுள்ளது.
ஆனால் தன் மக்களை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குகிறது!
புரிந்து கொண்டு பேசுங்கள் திரு தங்கபாலு அவர்களே!
இலங்கையில் அவதியுற்று மடியும் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற முயற்ச்சி எடுங்கள் தங்கபாலு அவர்களே!
சீமானும்,அமிரும் மட்டுமல்ல உலகத்தமிழ் மக்கள் அனைவரும் நீங்கள் தமிழர்களை காப்பற்றி விட்டால். உங்களை புகழ்வார்கள்.
உங்களிடம் ஒரு வேண்டுகோள் குறைந்த பட்சம் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி கொலை செய்யும் ஈனச்செயலை இலங்கை இராணுவம் நிறுத்த வேண்டும் என்றாவது உங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வையுங்கள்.தங்க பாலு அவர்களே!
தமிழனின் வேதனையை போக்குங்கள் !!!!
இதை செய்து விட்டு பேசுங்கள் !!!

Comments