
மலையாளத்தில் மாதவன் நடித்துள்ள மேட் இன் யூஎஸ்ஏ படம் ஆனந்தப் புன்னகை எனும் தலைப்பில் தமிழுக்கு வருகிறது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் கதை , வேலைக்காக அமெரிக்கா செல்லும் மாதவன், தானும் நண்பர்களும் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாபு ஆண்டனியிடம் கொடுத்து வைக்கிறார். நண்பனுக்காக பாபு ஆண்டனியிடம் பணத்தை கேட்க நினைத்தால் பாபு ஆண்டனி சுடப்பட்டு இறந்து போயிருக்கிறார்.
அதன் பின் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாதவன் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.காப்பற்றப்படும் அவர் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார் என்பதே கதை.
இந்த படத்தை ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேசன் தயாரிக்க,
ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் பண்ணியுள்ளார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது!

Comments