
கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பின் இணையத்துக்குள் வந்து பதிவிடுகிறேன்!
என் நண்பர் ஏ.ஆர்.கே.ராஜராஜா அவர்கள் இப்போது இரண்டு படங்கள் செய்துகொண்டிருக்கிறார்.
ஒன்று நாசர் ,ரம்பா நடித்து தெலுங்கில் சமீபத்தில் வெளியான "கொத்தகதா"என்றபடம்.
மற்றொன்று
தெலுங்கில் "ஆந்த்ருடு" என்ற பெயரில் கோபிசந்த்,சாயாஜி ஷிண்டே நடித்து வெளிவந்தது வெற்றி பெற்ற படம் .
தமிழில் "வேட்டைபுலி"என்று பெயர்வைத்து வசனம் எழுதி தமிழ் படுத்துகிறார் ராஜாராஜா.இந்த படத்தை அவருடன் பார்க்க நேர்ந்தபோது ஒரு விஷயம் மனதை நெருடியது.நான் போனமாதம் எழுதிய பதிவில் லங்கா படத்தையும் மலையாளிகளின் மனதை பற்றியும் வருத்தப்பட்டு எழுதி இருந்தேன் .
இந்த "ஆந்த்ருடு "படம் பார்த்ததும் இன்னும் மனம் அதிக வேதனை அடைந்து விட்டது.கதைப்படி நாயகன் போலிஷ் அதிகாரி அவன் காதலிக்கும் பெண் மேலதிகாரியின் மகள்.மேலதிகாரி பீகாரை சேர்ந்தவர்.அவரது உறவினரான பிகார் எம் பி சாயாஜி ஷிண்டே இருவரும் ஏதோ பழைய பகையில் பிரிந்து போனவர்கள் .இந்நிலையில் எம்.பி கோதாவரி நதியின் சங்கம விழாவுக்கு வரும் பொது அவரின் மகன் தன் உறவினரான போலிஸ் அதிகாரியின் மகள் மீது விருப்பம் கொள்ள பகையை மறந்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்க ,நாயகன் விட்டு கொடுக்கிறான்.நிச்சயதார்த்தம் அன்று மணமகள் ஜாதகத்தில் குறையிருப்பதால்,அவள் கழுத்தில் ஒரு வைர நெக்லஸ் போட்டால்தான் பிரச்சினை சரியாகும் என்று சொல்கிறார்.அதை ஏற்றுக்கொண்டு போலிஸ் அதிகாரியிடம் இருந்த பரம்பரை வைர நெக்லசை போட சொல்லுகிறீர்கள் ஆனால் அது அவர் வீட்டில் திருடு போய் விடுகிறது.இந்நிலையில் எம்.பி வீட்டில் நடக்கும் கலாட்டாக்களால் பயந்து போன நாயகியின் தம்பியும்,தங்கையும் நாயகனுக்கு பொன் செய்து தங்களையும்,தங்களது அக்காவையும் அழைத்து போக சொல்கின்றனர்.அதே நேரம் திருட்டு போன நகையை மீட்கிறார் நாயகன் இதை சாக்காக வைத்து கொண்டு பிகார் வந்துபெரும் அடிதடிகளுக்கு பின் நாயகியையும்,அவர்குடும்பத்தையும் காப்பாற்றி அழைத்து போகிறார்.இது அந்த படத்தின் கதை இதற்காக இயக்குனர் பிகார் காரர்களை காட்டு மிராண்டிகளை போல சித்தரித்து படம் எடுத்து இருக்கிறார் . ஏன் இப்படி இன்னொரு மாநிலத்துகாரர்களை இழிவு படுத்தும் விதமாக படம் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை.ஆந்திராகாரர்களுக்கும், pikaarikalukkum enna pirachinai therinthavarkal sollungal.

Comments