
அபியும் நானும் மிக அற்புதமான படம்! குடும்பத்தோடு காணக்கூடிய மாதிரி நகைச்சுவை படம் முழுதும் இழையோட தந்தை மகள் பாசத்தை,சர்தார்ஜியை காதலிக்கும் மகளை,தனக்கென்று யாரும் இல்லாமல் அனைத்து உறவுகளையும் உருவாக்கிக்கொண்டு வாழும் மகளின் காதலனை மருமகனாக ஏற்று கொள்வதையும் அற்புதமாக சினிமாவாக உருவாக்கி இருக்கிறார் .
இயக்குனர் ராதா மோகன்.
நிச்சயம் நூறு நாள் ஓடும் படம். நீங்களும் பாருங்கள் ! பார்த்து விட்டு ராணியை கடத்திய பிருத்விராஜின் குதிரை ஆணா,பெண்ணா என்று கூறுங்கள்! பிரகாஷ்ராஜையும் ,ராதாமோகனையும் பாராட்டுங்கள்!
அடுத்து !"சிலம்பாட்டம்" சிம்பு,யுவன்,சரவணன்,மதி,கனல் கண்ணன் இணைந்து பின்னி பெடலெடுத்து இருக்கிறார்கள்.
சிம்புவிற்கு ஆக்சன் ஹீரோவாக இது வெற்றிப்படம்! அவர் நடிப்பில் நல்ல முதிர்ச்சி!

தமிழரசன் கதாபாத்திரம் அருமை!

சிம்பு ஆட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து இருக்கிறார்!
மற்றபடி தமிழ் சினிமாவின் சாதாரண மசாலா படம்
!ஆனால் வசூலை வாரி குவிக்கும்!
சமீப காலத்தில் "சன் டிவி" துணையில்லாமல் வெற்றி பெற்றிருக்கும் முதல் படம் என்ற பெருமை சிம்புவிற்கு!
சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல,தலஅஜித் ரசிகர்களுக்கும் இந்த படம்
கொண்டாட்டம்.காரணத்தை தியேட்டரில் போயி பாருங்கள்!வரும் புத்தாண்டு சிம்புவின் வெற்றி புத்தாண்டு !

Comments