சமீப காலங்களில் வெளியான தனுசின் ஹிட் படங்கள் மொத்தத்தையும் பல லட்சங்கள் பணம் கொடுத்து வாங்கி படம் எடுத்தார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும்.

ஆனால் இன்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனுசும்,இயக்குனர் சுராஜும் சேர்ந்து பலதெலுங்கு படங்களை மிக்சர் பண்ணி படிக்காதவன் படம் எடுத்துள்ளனர்.

நவ்தீப்,சிந்து துலானி நடித்தகவுதம் எஸ்.எஸ்.சி படத்தின் கதைதான் படிக்காதவனின் கதை தளம்.இதில் ரவிதேஜா நடித்த பத்ரா படத்தின் கதையை இணைத்து ஜூனியர் என்டிஆர் நடித்த அசோக் படத்தின் காட்சிகளை திருடி சேர்த்து,சிரஞ்சீவி நடித்த இந்திரா படத்தின் கதை அமைப்பை களவாடி இன்னும் நிறைய தெலுங்கு படங்களை திருடி வெட்கமில்லாமல் படம் எடுத்துள்ளனர் .

இதில் பெரிய கொடுமை என்னவென்றால்!

படிக்காதவன் படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா ஒரு படி முன்னேறி பழைய என் டி ஆர் நடித்த அடவி ராமுடு படத்தின் சூப்பர் ஹிட் பாடலான

ஆறேசுக்கோ போயி பாறேசுக்குந்தானு !

என்ற பாடலை சுட்டு போட்டுள்ளார்! இதை சன் டிவி க்காரர்கள் வாங்கி வெளியிடுகின்றனர்!

அடுத்தவன் உழைப்பை திருடி பொழைக்கிறதுக்கு பதில் வேற தொழில் பண்ணலாம்!

Comments

Popular posts from this blog