ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கிங் தெலுங்கு திரைப்படம் ‘பட்டுகோட்டை அழகிரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. இதில், நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அப்பாவியின் சொத்தை அபகரிக்க முயலும் வில்லன் கோஷ்டியை கதாநாயகன் அழிப்பதே கதை. இதை பக்கா மசாலாப் படமாக இயக்கியுள்ளார் சீனு.


வசனம் எழுதி மொழிமாற்றம் செய்தவர் ஏஆர்கே .ராஜராஜா

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷா, அனுஷ்கா, ஜெனீலியா, ப்ரியாமணி, சார்மி, காம்னா, சினேகா உல்லால், மம்தா என 8 நாயகிகள் நாகார்ஜுனாவோடு நடனமாடியிருக்கிறார்கள்.


இந்த பாடலை கல்யாண்ஜி அவர்கள் எழுதி உள்ளார்,ஒரு பாடல் புகழ் பெற்ற பெண் பத்திரிக்கையாளர் மீரா எழுதியுள்ளார்,மற்றும் அறிமுக கவிஞர்கள் புதுவை மணி ,ஹேமா கீர்த்தி,ஷோபனா ஆகியோர் எழுதி யுள்ளனர்


இந்த படத்தில் நான்கு கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கவிஞராக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா .....


இந்த படத்துக்கு பட்டுகோட்டை அழகிரி என்று பெயர் வைக்க கூடாது என்று அழகிரி அவர்களின் பேரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.நாளை ஜூவி யில் அந்த செய்தி வருகிறது !

Comments

Popular posts from this blog