அருந்ததீ
ராமநாரயனின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படம்,தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த படம்.பொதுவாக நமது ரசிகர்கள் டப்பிங் படத்தை பெரிதாக ரசிக்க மாட்டார்கள்.இதுதாண்டா போலிஸ்,வைஜெயந்தி ஐபிஎஸ் ,அம்மன்,போன்ற படங்கள் விதி விலக்கு.சமீபத்தில் நயனதாரா,பிரபாஸ் நடிக்க ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதி வெளிவந்த முரட்டு தம்பி படமும் நல்ல லாபத்துடன் ஓடுகிறது !
இருந்தாலும் இந்த அருந்ததீ படவிசயம் வித்தியாசமானது.இதன் ஒப்பனிங் வசூல் சன்டிவி தரப்பை மிரட்டிவிட்டது.ஏன் இப்படி அருமையான படத்தை கோட்டை விட்டீர்கள் என்று சினிமா பொறுப்பாளர்களை வறுத்து எடுக்கிறார்களாம்.
(உண்மையில் ராமநாராயணன் தான் டிவியில் அசுர விளம்பரம் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கலாம் என்பதை சன் ட்டிவிக்காரரகளுக்கு கத்து கொடுத்தார் ருத்ரநாகம் படம் மூலம். )
சரி அருந்ததீ படத்துக்கு வருவோம்.
படத்தின் கதை பாட்டிகள் கதை சொல்லி கேட்டு வளர்ந்த நம் பெண்களுக்கு பிடித்தமான கதை.படத்திலும் பாட்டி மனோரமா தான் கதை சொல்கிறார்.
படத்தின் விமர்சனம் நிறைய வந்து விட்டதால்,நான் எழுதவில்லை.
உண்மையில் நாடு இருக்கும் சூழ்நிலையில் தைரியமாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக படமெடுத்ததற்கு ஷ்யாம் பிரசாத் ரெட்டியை பாராட்டியே ஆக வேண்டும்.
ஒரு மாயாஜால கதையில் முஸ்லிம் பக்கீர் ஒருவருக்கு ஹீரோவுக்கு இணையான கதா பாத்திரம் அமைத்து படம் எடுத்த தைரியத்திற்கே அவருக்கு விருது கொடுக்கலாம்.
தொழில் நுட்பம் என்னும் மந்திரத்தை இந்த படத்தில் அற்புதமாக கையாண்டு உள்ளார்கள்.
நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சரியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதிலும்,பசுபதியாக வரும் சோனுவும்,பக்கீராக வரும் சாயாஜி ஷிண்டே வும்,அருந்ததீயாக வரும் அனுஷ்காவும்,பின்னி எடுத்துவிட்டார்கள்.
படத்தின் மிகமுக்கிய விஷயம் ஸ்பெசல் எபெக்ட்.அதை மிக நுட்பமாக செய்த ராகுல் நம்பியாரும்,பசுபதிக்கு குரல் கொடுத்த (தமிழ்,தெலுங்கு ) சாய் ரவியும் தான் இந்த
வெற்றிக்கு மிக முக்கியமான காரண கர்த்தாக்கள்.


பொதுவாக சேர்ந்தே வாழும் மனப்பான்மை உள்ள நம் மக்கள் இந்த படத்தை வெற்றி பெற வைத்ததில் வியப்பில்லை.

படம் எடுக்கப்பட்ட விதமும் அதை கோர்த்த (எடிடிங்) விதமும் பட்டையை கிளப்பி உள்ளது.

ஏற்க்கனவே நான் நமது பகுதியில் எழுதி உள்ளேன் தெலுகு சினிமா மெல்ல,மெல்ல உலக தரத்துக்கு போய் கொண்டு இருக்கிறது.தமிழ் சினிமா தேய்ந்து கொண்டு இருக்கிறது .சுதாரித்து கொள்ளவேண்டும் தமிழ் சினிமா கலைஞர்கள்.

அருந்ததீயின் வெற்றி அருமையான வெற்றி!
நம் நாட்டுக்கு தேவையான வெற்றி!வாழ்த்துக்கள் அருந்ததீயின் அனைத்து கலைஞர்களுக்கும்!




(ஷ்யாம் பிரசாத் ரெட்டி அருந்ததி படத்தின் மூலம் சினிமாவுக்கு என்று இருந்த அடிப்படை கோட்பாடுகளை மீறி இந்த படத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் கதாபாத்திரத்தை கதாநாயகனுக்கு நிகராக படைத்து சாதித்து உள்ளார்!மக்களின் மனநிலை "சம்த்துவம்" என்பதை புரியவைத்த ஷ்யாம்பிரசாத் ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .)

Comments

psychoteller said…
நண்பரே நன்றாக உள்ளது தங்கள் கருத்துக்கள்..
தொட்ருட்டும் உங்கள் பணி..

Popular posts from this blog