"அருந்ததீ" பெற்ற மாபெரும் வெற்றியால் தெலுங்கில் அனுஷ்கா நடித்த படங்கள் எல்லாம் இனி மள,மளவென்று தமிழில் டப்பிங் ஆகும் .அதை நிரூபிப்பது போல் அனுஷ்கா நாகர்ஜூனாவின் அக்காள் மகன் சுமந்த் உடன் நடித்த "மகா நந்தி" படம் தமிழில் டப்பிங் ஆகிறது .நாளை சனிக்கிழமை பூஜையுடன் ஆரம்பம் ஆகும் இந்த படத்துக்கும் வழக்கம் போல் ஏ.ஆர்.கே.ராஜராஜா தான் வசனம் எழுதுகிறார்.
தமிழில் ரஜினி, மம்முட்டி நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி படத்தின் உல்டா இந்த மகாநந்தி
உண்மையில் மகாநந்தி தெலுங்கில் தோல்வியடைந்த படம்.
அதில் சண்டைக்காட்சிகள் நன்றாக இருப்பதால் தமிழில் முற்பகுதியை பிற்பகுதியிலும்,பிற்பகுதியை முற்பகுதியிலும் மாற்றி வெளியிடப்போவதாக ஏ.ஆர்.கே.ராஜராஜா சொன்னார் .
உண்மையில் புது முயற்ச்சிதான் வாழ்த்துக்கள்!

Comments