

ஒரு ஆச்சர்யமான விஷயம் .சமீபத்தில் வைகை புயல் வடிவேலுவை ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு அவருடன் போக்கிரி,வில்லு படங்களில் பணிபுரிந்த உதவி இயக்குனர் போயிருக்கிறார்கதை கேட்ட வடிவேலு நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார்.சரி சம்பளம் எவ்வளவு என்று கேட்ட உதவி இயக்குனர் பேயறைந்தவர் போல் ஆகிவிட்டாராம்.இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.வடிவேலு எவ்வளவு சம்பளம் கேட்டாராம் தெரியுமா? அஞ்சு கோடி ரூபாய் !
பின் அதிர்ச்சி யடையாமல் என்ன செய்வது? இதில் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா அவருக்கு ஆறு கோடி சம்பளம் கொடுக்க ஒரு கம்பெனி தயாராக இருக்கிறதாம் வடிவேலுதான் நடிக்க மறுக்கிறாராம்!
சினிமாக்காரர்கள் நடிக்க வாய்ப்பில்லாததால் இப்படி கேட்கிறார் என்று சொல்கிறார்கள் !வயித்தெரிச்சலாக இருக்குமோ!!!?

Comments