சமீபத்தில் வெற்றி பெற்ற பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் இயக்குனர் சிகரம் தயாரிப்பில் பரத் ஹீரோவாக வைத்து கதை சொல்லி இருக்கிறார் .
கதை கேட்ட கம்பெனியில் ஒப்புதல் சொல்லி விட்டார்கள்.
பின் தங்களது கம்பெனி பெயரை சொல்லி பரத்திடம் கதை சொல்லி ஓகே வாங்குங்கள் என்று சொல்லி அனுப்பி உள்ளனர்.
சந்தோசமான உதவி இயக்குனர் பரத்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார்,கம்பெனியின் பெயரை கேட்டதும் மேனேஜர் தட்டி கழித்துவிட்டாராம்.
அது மட்டும் இல்லாமல் உதவி இயக்குனரை நோகடித்து விட்டாராம்.
ரஜினி,கமல் எல்லாம் நடித்த பேனரில் பரத் நடிக்க மாட்டாராம். கொடுமை என்னவென்றால் சமீபத்தில் சரத் குமாரை வைத்து வருடத்தின் பெயரால் சொந்த படம் எடுத்து சுட்டு கொண்ட மலேசிய இயக்குனரை சுற்றி கொண்டிருக்கிறாராம் பரத் மேனேஜர் பரத்தை வைத்து படமெடுக்க சொல்லி.
(
மார்க்கெட் இல்லாத நேரத்தில் சரத்குமாரை வைத்து கிட்ட தட்ட பத்து கோடி செலவில் படமெடுத்து ரிலிஸ் செய்ததால் தன்னையும் வைத்து ஆறு கோடியில் பிரமாண்ட படம் எடுக்க சொல்லி தொங்குகிறாராம் பரத்)

வரிசையாக படங்கள் ஊற்றி கொண்டதில் பரத் தப்பு,தப்பாய் முடிவெடுப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது.

Comments

Popular posts from this blog