
இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் இரண்டு பிரச்சினை.
ஒன்று பாராளுமன்ற தேர்தல்.
மற்றொன்று இலங்கை தமிழர் பிரச்சினை.

(இன்று அது முடிவுக்கு வந்து விட்டதாக சிலர் சந்தோசப்படுகிறார்கள்)
இலங்கை தமிழர் பிரச்சினையில் மொத்த தமிழக கட்சிகளும் சேர்ந்து இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி புறக்கணித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
இந்திய அரசு உண்மையில் பயந்திருக்கும் .விஷயம் மிக எளிதாக சர்வதேச கவனத்தை பெற்று இருக்கும்.
இதை செய்யாத கட்சிகளும்,எடுத்து கூறாத தமிழ் ஆர்வ அமைப்புகளும் கருணாநிதியை மட்டும் குறை கூறுவதில் எனக்கு உடன் பாடில்லை.
இவர்கள் இப்படி செய்வதால் மக்கள் அந்த ஓட்டை அதிமுக வுக்கு போடுவார்களே தவிர மற்ற தனி வேட்பாளர்களுக்கு போடப்போவதில்லை.
விடுதலைப்புலிகள் தலைவரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கூறிய ஜெயலலிதா லாபம் அடையட்டும்,ஆனால் கருணாநிதி தோற்று போகட்டும் என்று அலையும் இவர்களை விட கருணாநிதி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.
இந்த காட்டு கூச்சல் இப்போது போடுபவர்கள் ஜெயலலிதா ஆட்சி வந்தால் வாயையும்,இன்னொன்றையும் பொத்தி கொள்ளத்தான் முடியும்.
மீறி பேச அவர்களாலும் முடியாது ! ஜெயலலிதாவும் விடமாட்டார்!
உணருவார்களா?
சொந்த சகோதரனின் மேல் உள்ள கோபத்தில் எதிரியை வெல்ல வைக்க நினைக்கும் மனப்பான்மை சந்தேகமானது.

Comments