சோரம் போன போராளிகள்!
இது தமிழர்களுக்கு கேடு காலம் போலிருக்குது. ஈழத்தமிழர்களின் அவலங்களை பேசி எத்தனையோ பேர் "ஒட்டு பொருக்கி" இருந்தாலும்,இப்போது ஜெயலலிதாவும்,அவருக்காக ஒட்டு பொறுக்கும் ,சீமான் .பாரதி ராஜா அன்ட் கம்பெனியின் ஒட்டு பொறுக்கும் ஸ்டைல்தான் கேவலமாயிருக்கிறது. முன் பொரு முறை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதாவிடம் இலங்கைத்தமிழர்களை "கிபேர்"குண்டுகளை போட்டு கொத்து,கொத்தாக கொல்கிறார்கள்.இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்ட போது,போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று சண்டாலத்தனமாக ஜெயலலிதா சொல்லி அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வந்ததை ஈழத்தமிழர்களுக்காக உருகும் ஈன தமிழர்கள் எளிதாக மறந்து விட்டார்கள். ஜெயலலிதா ஜெயித்தவுடன் இலங்கைக்கு படையை அனுப்பி "ராஜபக்சேவை"கைது செய்து கொண்டுவந்து தமிழ் நாட்டில் வைத்து தூக்கில் ஏற்றிவிடுவார்.
அதன் பின் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கித்தந்து விடுவார் என்று இவர்கள் நம்புகிறார்கள். கொடுமை !!!!
பிரபாகரன்
எல்லாம் ஒரு தலைவனா என்று இந்த ஜெயலலிதா கேட்டதற்கு இதே சீமான் -ஆயிரம் துப்பாக்கிகளை பார்த்து தலைவரானவர் என்தலைவர்
"பிரபாகரன்" நீ எதைப்பார்த்து தலைவி ஆனாய் என்று அவருக்கு பதில் சொன்னார்.
அதே சீமான் இன்று அந்த ஜெயலலிதாவுக்கு மகன் என்று போது மேடையில் பெருமை கொள்கிறார்.வெட்கம் ! பாரதி ராஜா மேடையில் பேசுவதை விட்டு,விட்டு முதலில் கலைஞர் டிவியில் வரும் தெக்கத்தி பொண்ணு சீரியலை நிறுத்தட்டும். நாளை ஓட்டு போட போகும் போது தெளிவாக முடிவெடுங்கள்.பாதலைவர் ஈழ தமிழர்களுக்காக ஜெயலலிதாவுடன் கூட்டு வைக்க வில்லை.ஏழு சீட்டுக்காக வைத்தவர்.ஜெயலலிதா தமிழர்களின் பரம்பரை எதிரி. மற்றும் இவர்கள் கூட்டணியில் உள்ள மதிமுக ,கம்யூனிஸ்டுகள் ஆகியோர் பாவப்பட்ட ஜீவன்கள். கலைஞர் ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள்.
இவர்களில் பேய் ,பிசாசு இரண்டும் இருக்கும் போது கொஞ்சம் நல்லதை தேர்ந்தெடுங்கள் .பிசாசை தேர்ந்தெடுத்து சொந்த முயற்ச்சியில் சூனியம் வைத்து கொள்ளாதீர்கள்.
நிச்சயமாக மறுபடி கலைஞர் ஜெயித்தால் நன்றியுடன் ஈழத்தமிழர்கள் விசயத்தில் முழு முயற்ச்சி எடுப்பார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

முப்பத்தி ஒன்று!

Comments

MiniLorry said…
மக்களுக்கு ஈழ செய்திகள் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை

சன் மற்றும் கலைஞர் செய்திகளையே பார்க்கும் மக்களுக்கு அதில் ஈழ செய்திகள் எதுவும் காட்டப்படுவதில்லை என்பதால் மற்றும் செய்தி தாள்களிலும் எதுவும் அதிகம் வருவதில்லை என்பதாலும் இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாமலே இருக்கிறார்கள்.

இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
tamilraja said…
mikka nanri
mini lorri
ungal karuththu sari