
Technorati Profile
செல்வராகவன் காதல் பற்றிய படம் எடுத்து போரடித்து இப்போது "அபோகலிப்டா " படத்தின் பாதிப்பில் அதே மாதிரி கதை தயார்பண்ணி :"ஆயிரத்தில் ஒருவன்" படம் எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் பார்த்திபன்தான் மெயின் ரோல் பருத்தி வீரன் கார்த்தி சின்ன கேரக்டர்தானாம்.
இடையில் ஒரு நாள் சூட்டிங்க பார்த்து வரலாம் தன மகள் கூட உதவி இயக்குனராக எப்படி வேலை செய்கிறார் என்பதையும் பார்க்கலாம் என்று ஐதராபாத்துக்கு போனாராம் சூப்பர்ஸ்டார் .
சூட்டிங் ஸ்பாட்டில் அவரை சிகரெட்டும் கையுமாக வரவேற்றாராம் செல்வராகவன்.
இதில் அப்செட்டான ரஜினி கொஞ்ச நேரம் செட்டில் இருந்து விட்டு கிளம்பி விட்டாராம்.
இந்த விசயத்தில் பார்த்திபனுக்கு கூட வருத்தம் தானாம்.
ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாருக்கே இந்த மரியாதைதான் என்றால் நாம் பரவாயில்லை என்று ஆறுதல் பட்டு கொண்டாராம்.
முன்பு இதே போல் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் பொது செலவரகவனின் அப்பாவின் குருநாதர் விசு அவர்களுக்கு வசனம் சொல்லும் பொது கையில் சிகரெட்டுடன் சொல்லி கொடுத்தாராம் .அப்போது விசு தம்பி அந்த சிகரெட்டை பிடித்துவிட்டு வந்து சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று சொன்னாராம்.அதற்க்கு செல்வராகவன் விசுவிடம் சார் சிகரெட் மேல கவனம் வைக்காம வசனம் மேல கவனம் வையுங்க சார் என்று சொன்னார்.
உடனே விசு இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று போய் விட்டார் பின்பு அந்த கேரக்டரில் விஜயகுமார் நடித்தார் .
அன்று விசு இன்று ரஜினி!

Comments