தெலுங்கில் வேதம் என்ற பெயரில் வெளியான படமே சிம்பு ,பரத் நடிக்க வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். நேர்மையான படைப்பாளியின் வீரியமான படைப்பு. சிம்பு இந்த படத்தில் கதாநாயகன் இல்லை! வாழ்க்கையின் பலதரப்பட்ட பிரச்சினைகளின் தொகுப்பாய் கதை பலகிளைகளில் பயணிக்கிறது. அதில் ஒரு கதாபாத்திரம் சிம்பு . மீடியாக்களாலும் ,போலிஸ்காரர்களாலும் தவறாகவே அணுகப்படும் இஸ்லாமிய இளைஞர்களின் பிரச்சினை பற்றி இதற்க்கு முன்னாள் யாரும் இவ்வளவு
தீவிரமாக கையாண்டதில்லை. சிம்பிவின் கதாபாத்திரம் கேபிள் டிவி பையன் ஒரு பணக்கார பெண்ணை காதலித்து செட்டிலாக ஐம்பதாயிரம் ரூபாய்க்காக திருடனாக மாறும். தனது மகனை படிக்க வைக்க கிட்னி விற்கும் சரண்யாவிடம் பணம் திருடி ஐந்து ஸ்டார் ஹோட்டலில் பணம் கட்டும் வேளையில் மனம் திருந்தும். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கலங்கடிக்கும் சினிமா. நிச்சயமாக தமிழ் சினிமா படைப்பாளிகள் வெட்கப்படும் படைப்பு ... தமிழ்ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் அருமையான படைப்பு! கிரீஷ் என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுவது நிச்சயம்

Comments

Popular posts from this blog